Home இலங்கை சமூகம் முன்பள்ளி ஆசிரியர்களை சந்தித்த ரவிகரன் எம்.பி

முன்பள்ளி ஆசிரியர்களை சந்தித்த ரவிகரன் எம்.பி

0

முல்லைத்தீவு – முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினருக்கும் வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (14) முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பில்
முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்து குறைந்த ஊதியத்துடன்
சேவையாற்றுகின்றமைதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு
கொண்டுவரப்பட்டது.

நிரந்தர நியமனம்

அத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை
எடுக்குமாறும் முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினர் இதன்போது கோரிக்கையும்
முன்வைத்தனர்.

மேலும், நீண்டகாலமாக பல இன்னல்களுக்கு மத்தியில் குறைந்த ஊதியத்துடன்
பணியாற்றிவரும் குறித்த முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இந்தநிலையில் முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட
கோரிக்கைகள் தொடர்பில் தாம் கவனஞ் செலுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version