Home முக்கியச் செய்திகள் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி

0

புதிய இணைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்ற சபா மண்டபத்திற்கு வருகை தந்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டடுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் விசேட உரையாற்றுவதற்காக அவர் வருகைதந்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட துணை மதிப்பீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) இன்று (19) நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்காகவும், அழிவுக்குள்ளான உட்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட துணை மதிப்பீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

500 பில்லியன் ரூபாய் துணை மதிப்பீடு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க நேற்று (18) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் துணை மதிப்பீட்டை இன்று நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டிற்குரிய 500 பில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த குறைநிரப்பு மதிப்பீட்டை பிரதமர்  ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/TZ2Vdd1UZ94

NO COMMENTS

Exit mobile version