Home இலங்கை சமூகம் வடக்கில் முதன்முறையாக ஜனாதிபதி அநுர குமாரவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

வடக்கில் முதன்முறையாக ஜனாதிபதி அநுர குமாரவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டம்

0

வடமாகாணத்தில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்
இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் சுண்டிகுளம் சந்தி இளைஞர்களின் ஏற்பாட்டினால்
24.11.2025இன்று மாலை4.00 மணியளவில் ஜனாதிபதி அனுராகுமார திசாநாயக்கவின் 57ஆவது பிறந்தநாளை சுண்டிக்குளம் சந்தி இளைஞர்கள் கேக் வெட்டி மற்றும் வீதியால்
சென்ற மக்களுக்கு கேக் இனிப்பு வகைகளையும் வழங்கிக் கொண்டாடினர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்

இதன் போது
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இளைஞர்கள்,

முன்னைய ஆட்சியாளர்கள் எவரும்
சொன்னதை செய்வதில்லை தற்போதைய ஜனாதிபதி கூறிய வாக்குறுதிகளை செயல்படுத்தி
வருகிறார்.

போதை பொருளை முற்றும் முழுதாக அளித்து இளைய தலைமுறைகளை போதைப்
பொருளிலிருந்து மீட்டெடுத்து நாட்டின் போதை பொருளை முற்று முழுதாக ஒழிப்பதற்கு
நடவடிக்கை மேற்கொண்டமை எமக்கு பிடித்துள்ளது.

 தற்போதைய ஜனாதிபதி துயிலும் இல்லங்களில்  இராணுவத்தினரை அகற்றுவதாகவும் தற்போதைய அரசாங்கத்தில் மக்களுக்கான பேச்சு
சுதந்திரத்தை முற்றும் முழுதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள்
தமது தேவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய வகையில் அனைத்து திணைக்களங்களும்
செயற்பட்டு வருவதை முழு மனதுடன் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version