Home இலங்கை அரசியல் ஜனாதிபதி அநுரவின் 57வது பிறந்த நாள் இன்று : எவ்வித கொண்டாட்டங்களும் இல்லை

ஜனாதிபதி அநுரவின் 57வது பிறந்த நாள் இன்று : எவ்வித கொண்டாட்டங்களும் இல்லை

0

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகர ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்க இன்று தனது 57வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார்.

அனுர குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24 அன்று மாத்தளை மாவட்டத்தின் தேவஹூவா கிராமத்தில் பிறந்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுர, தேசிய மக்கள் சக்தியை (NPP) உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்த பாரம்பரியத்தை மாற்றி, 2024 செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவரது வெற்றி இலங்கை அரசியல் வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

ஊழலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு, நெருக்கடி நிலைமையில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த புதிய கொள்கைகள்
இவற்றை அறிமுகப்படுத்துவதற்கு அவர் முன்னுரிமை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு விசேட அரசு விழாக்கள் அல்லது நிகழ்வுகள் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

அதற்குப் பதிலாக, வழக்கமான தினசரி ஆட்சி பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான திட்டமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version