Home இலங்கை அரசியல் அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை

அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

குறித்த விடயத்தை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டம் இன்று (03.12.2025) மாலை 05.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

ஒரு நிமிட மௌன அஞ்சலி

இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட அனர்த்த நிலை காரணமாக உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று காலை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலியைச் செலுத்தினர்.

எதிர்க்கட்சிகளின் பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க இதற்கான யோசனை முன்வைத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களில் இருந்து எழுந்து நின்று ஒரு நிமிட மௌன அஞ்சலியைச் செலுத்தினர்.

NO COMMENTS

Exit mobile version