Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடுமையான நடவடிக்கை – உடன் கைது செய்ய உத்தரவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடுமையான நடவடிக்கை – உடன் கைது செய்ய உத்தரவு

0

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவ்வாறானவர்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


கருத்துக் கணிப்புகள் 

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் இன்று தபால் நிலையத்தில் கையளிக்கப்படவுள்ளதுடன், உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் நாளை முதல் வீடுகளுக்கு சென்று விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும்.

மேலும், ஞாயிற்றுக்கிழமை சிறப்பு விநியோக நாளாக அமல்படுத்தப்படும்.

Source: https://tamilwin.com/article/president-election-2024-vote-survey-sri-lanka-1725286946

NO COMMENTS

Exit mobile version