Home இலங்கை அரசியல் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

0

தேசிய மக்கள் சக்தி மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெரிவான மக்கள் பிரதிநிதிகளுடனான ஒன்றுகூடல் நிகழ்வொன்று நேற்று (25) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில், தேசிய மக்கள் சக்தி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

அலரி மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முக்கிய உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.

முக்கிய அமைச்சர்கள்

அத்துடன், மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் டில்வின் சில்வா, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உள்ளூராட்சி அலுவல்கள் அமைச்சர், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் போன்ற அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.  

NO COMMENTS

Exit mobile version