Home இலங்கை சமூகம் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளவுள்ள அநுர..!

0

கொழும்பில் நாளை (19)  நடைபெறவுள்ள யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

எடுக்கப்பட்ட தீர்மானம் 

அதற்குப் பதிலாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் தலைமையில் யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தீர்மானம் இன்று சடுதியாக மாற்றிக் கொள்ளப்பட்டு, நாளைய யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.

அவருடன் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version