Home இலங்கை சமூகம் ஜனாதிபதியின் 50,000 ரூபாய் உதவித் தொகை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஜனாதிபதியின் 50,000 ரூபாய் உதவித் தொகை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

ஏழைக் குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் உதவித் தொகையை வழங்குவார் என்று சமூக ஊடகங்கள் மூலம் போலி குறுஞ்செய்திகளை வெளியிடுவது குறித்து பல்வேறு முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சமூக ஊடக வலையமைப்புகள் மூலம் அனுப்பப்படும் போலி குறுஞ்செய்திகளுக்கு தங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் மேனகா பத்திரன கூறுகையில்,

போலி குறுஞ்செய்தி

“போலி குறுஞ்செய்தி தொடர்பாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஏராளமான முறைபாடுகள் வந்துள்ளன.

ஏழைக் குடும்பங்களுக்கு ஜனாதிபதி 50,000 ரூபாய் உதவித் தொகையை வழங்குவார் என்ற செய்தி சமூக ஊடகங்கள் மூலம் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்த இணைப்புகள் மூலம் இணைப்பதைத் தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இணைப்புகளைத் தடுக்க நாங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இவை போலி இணைப்புகள்.

இவற்றின் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கினால், உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல், மின்னஞ்சல் கணக்குகளுக்கு மூன்றாம் தரப்பு அணுகல் ஆகியவை நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும்’’ என்றார்.

NO COMMENTS

Exit mobile version