Home இலங்கை சமூகம் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து வழங்கப்பட்ட நிதி குறித்து வெளியான தகவல்

ஜனாதிபதி நிதியத்தில் இருந்து வழங்கப்பட்ட நிதி குறித்து வெளியான தகவல்

0

நிதி ஆதாரத்தில் நலிவடைந்தோருக்காக ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி நிதியிலிருந்து உதவியை பெற்ற அரசியல்வாதிகளிடம் இருந்து அதனை திரும்பப் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமையில் உள்ளவர்களை காட்டிலும்; அரசியல்வாதிகளே கடந்த சில ஆண்டுகளில் இந்த நிதியில் இருந்து அதிக பணத்தை பெற்றுள்ளதாக வெளியான தகவலை அடுதது, இது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.

கணக்காய்வாளரின் கணக்காய்வு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1978 ஆம் ஆண்டின் 7ஆம் எண் நாடாளுமன்றச் சட்டத்தின்படி, ஜனாதிபதி நிதியானது, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் காலத்தில் நன்கொடையாக வழங்கப்பட்ட 237,120 ரூபாய் ஆரம்ப மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி நிதியத்தின் அதிகாரபூர்வ வலைத்தளத்தின்படி, இந்த நிதியத்துக்கு, லொத்தர் சபை மற்றும் பொது நன்கொடைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் இதன் கணக்குகள் ஆண்டுதோறும் கணக்காய்வாளரின் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

தெளிவான வழிமுறை

வறுமை நிவாரணம், கல்வி மற்றும் மதத்தின் முன்னேற்றம், தேசிய சேவையை அங்கீகரித்தல் மற்றும் பொருத்தமானதாகக் கருதப்படும் பிற பொது நல நடவடிக்கைகள் ஆகியவை இந்த நிதியத்தின் முதன்மை நோக்கங்களாக உள்ளன.

அத்துடன், இந்த நிதியம் மருத்துவ உதவி, வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மாணவர்களுக்கான உதவித்தொகைகள் மற்றும் மத மற்றும் கலாசார முயற்சிகளுக்கான மானியங்கள் போன்ற பல செயல்பாடுகளுக்கும் நிதியுதவியை வழங்குகிறது.

எனினும், நிதி வழங்கப்பட்டவுடன் அதைத் திரும்ப வழங்குவதற்கோ அல்லது மீட்டெடுப்பதற்கோ சட்டம் தெளிவான வழிமுறையை இந்த நிதியம் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version