Home இலங்கை அரசியல் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து செய்யும் சட்டமூலம்! சவாலுக்குட்படுத்திய மகிந்த தரப்பு

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து செய்யும் சட்டமூலம்! சவாலுக்குட்படுத்திய மகிந்த தரப்பு

0

ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்காக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை உயர் நீதிமன்றத்தின் ஊடாக சவாலுக்குட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதி உரிமைகள் சட்டத்தை இரத்து செய்வதற்காக முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டிமூலத்தின் அடிப்படையில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆர்வலர் ரேணுகா துஷ்யந்த பெரேரா, இந்த மனுவுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு மேலதிகமாக, வாக்கெடுப்பு மூலம் மக்கள் ஒப்புதல் தேவை என்று அறிவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

ஹர்ஷன நாணயக்கார

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இந்த மனுவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதன்படி இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வருமாயின், முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை இரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version