Home இலங்கை அரசியல் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கூறும் விடயம்

துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி கூறும் விடயம்

0

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையை இன்று (23) தரிசித்த பின்பே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு

அதனையடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.

பாதாள குழுக்களிடையே மோதல்கள் வலுப் பெற்றிருந்தாலும் அது பொதுமக்களின் பாதுகாப்புக்குக்கு சிக்கலாக அமையவில்லை.

இதுவரையில் அரசியல் அனுசரணையில் வளர்ச்சி கண்ட பாதாள குழுக்களை முழுமையாக கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.

உள்ளூராட்சி தேர்தல்

அதேபோல் உள்ளூராட்சி தேர்தலை மிக விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது. தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எந்தவித சட்ட ரீதியான தடைகளும் இல்லை.

அதற்கு தேவையான நிதியையும் அரசாங்கம் ஒதுக்கியிருக்கும் நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படுமெனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

NO COMMENTS

Exit mobile version