Home இலங்கை சமூகம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு அழுத்தம் : பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு அழுத்தம் : பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த கோரிக்கை

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கை தொடர்பில் அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா(us), பிரித்தானியா(uk), கனடா(canada), மலாவி(Malawi), மொண்டெனேகுரோ(Montenegro) மற்றும் வடக்கு மெசிடோனியா(North Macedonia) ஆகிய நாடுகள் இணைந்து இந்த அறிக்கையை முன்வைத்துள்ளன.

மனித உரிமை மீறல்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் 

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரின் பொறுப்புக்கூறல் அறிக்கைக்கு இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென குறித்த நாடுகள் கூட்டு அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளன.

யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்பு

இதேவேளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பயங்கரவாத ஒடுக்குமுறை மற்றும் இணைய பாதுகாப்பு குறித்தான புதிய சட்டங்கள் கருத்து சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட வேண்டுமென அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் உயர்பாதுகாப்பு வலயத்தில் காணி விடுவிப்புக்கு பாராட்டு தெரிவித்த அந்த நாடுகள் வடக்கு, கிழக்கில் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறும் தெரிவித்துள்ளன. குறித்த கூட்டத்தொடரின் அமர்வுகள் அடுத்த மாதம் 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளன.  

NO COMMENTS

Exit mobile version