Home இலங்கை சமூகம் பால் மா விலை குறைப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

பால் மா விலை குறைப்பு தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் (milk power) விலையை மீண்டும் குறைப்பதற்கு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறித்த தகவலை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் பால் மாவின் விலை திருத்தம் தொடர்பில் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என்று அசோக பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இயக்கச்சியில் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கும் உணவு வகைகள்

பால் மாவின் விலை

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் பால் மா இறக்குமதியாளர்கள் 400 கிராமுக்கு 60 ரூபாவாலும், ஒரு கிலோகிராம் ஒன்றிற்கு 150 ரூபாவாலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன்படி, தற்போது பால் மா சந்தையில் பல்வேறு விலைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பால் மாவின் விலையை குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று முதல் நடைமுறைக்கு வரும்வகையில் மீண்டும் பால் மாவின் விலையை குறைப்பதாக நியூசிலாந்தில் (New Zealand) இருந்து பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வாகன சாரதிகளுக்கு வெளியான அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்றப்படாமல் இருக்கும் 1500 குடும்பங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  

NO COMMENTS

Exit mobile version