Home இலங்கை சமூகம் குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை

0

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் கடந்த ஆண்டை விடவும் இவ்வருடம் 19 வீதமளவில் குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் அடிக்கடி கொள்வனவு செய்யும் 40 வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன.  

குறித்த விடயத்தை வர்த்தக வாணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

விலைகளைக் குறைக்க துரித நடவடிக்கை

அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,  இவற்றில் வீட்டுத் தேவைகளுக்கு பயன்படும் பொருட்களே அதிகம். நுகர்வோர் அடிக்கடி
கொள்வனவு செய்யும் பொருட்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

இத்தகைய பொருட்களின் விலைகளைக் குறைக்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.  இதையடுத்தே 55 முதல் 60 வகையான பொருட்களின் விலைகளை
குறைத்துள்ளோம். 

பொருட்களின் விலை குறைப்பை மேற்கொள்வதில் அரசாங்கம்
தொடர்ந்தும் கவனம் செலுத்தும்.

மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்குடனே அரசாங்கம் இவ்விலைகளைக் குறைத்துள்ளது என்றார். 

NO COMMENTS

Exit mobile version