Home இலங்கை குற்றம் தேவாலயத்தில் பல மில்லியன் ரூபாவை சூட்சுமமாக கொள்ளையிட்ட திருடன்

தேவாலயத்தில் பல மில்லியன் ரூபாவை சூட்சுமமாக கொள்ளையிட்ட திருடன்

0

களுத்துறை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் போதகர் ஒருவருக்கு சொந்தமான 3.5 மில்லியன் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது.

அதில் அமெரிக்க டொலர், ஸ்டெர்லிங் பவுண்ட், யூரோ மற்றும் கனேடிய டொலரும் காணப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

தேவாலயத்தின் போதகர் நேற்று காலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

பணம் திருட்டு

தந்தையின் அறையிலிருந்தும், அலுமாரியிலிருந்தும் பணம் இவ்வாறு திருடப்பட்டதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மதியம் சந்தேக நபர்கள் ஆயுதத்தை பயன்படுத்தி தேவாலயத்தில் உள்ள ஒரு மண்டபத்தின் கதவை உடைத்து உள்ளே சென்றதாகவும், அவர் தங்கியிருந்த அறைக்குள் புகுந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதுகாப்பு கமராக்களை பயன்படுத்தி சந்தேக நபர்களை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version