Home இலங்கை அரசியல் நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க ஆதரவு வழங்கியவர் வடக்கு ஆளுநரே : தினேஷ் குணவர்தன

நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க ஆதரவு வழங்கியவர் வடக்கு ஆளுநரே : தினேஷ் குணவர்தன

0

தற்காலிக மற்றும் அமைய அடிப்படையிலான ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் செயற்பாட்டிற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸே முதன் முதலில் தனது ஆதரவை வழங்கியதாக பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றும் தற்காலிக
ஊழியர்களுக்குநேற்று (12.07.2024) அவர் தலைமையில் நிரந்தர நியமனம் வழங்கி வைக்கப்பட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ச்சியான முயற்சி

மேலும், ஆளுநரின் தொடர்ச்சியான முயற்சியின் பலனாகவே 165 பேருக்கான நிரந்தர நியமனங்கள் கிடைத்துள்ளது.

நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொள்ளும் ஊழியர்கள் தங்களின் கடமைகளை உரியவாறு முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் 165 பேருக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன. 

உரிய நடவடிக்கைகள்

இதன்போது உரையாற்றிய வடக்கு ஆளுநர், மிக நீண்ட காலமாக உள்ளூராட்சி நிறுவனங்களில் தற்காலிக, அமைய அடிப்படையில் பலர்
பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுக்கொடுக்க
பாரிய பிரயத்தனங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எங்களின் கோரிக்கையை ஏற்று,  ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய,  பிரதமர் அவர்கள் உரிய
நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இவர்கள் இருவருக்கும் நன்றிகளை
கூறிக்கொள்கின்றேன். 165 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்க அனுமதி
கிடைத்துள்ளது.

நீண்ட கால ஏக்கத்திற்கு ஒரு தீர்வு காணப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/prime-minister-said-about-the-governor-in-jaffna-1720832585

NO COMMENTS

Exit mobile version