பாரிய போராட்டம் ஒன்றின் பின்னர் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் அதிபர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பாடசாலைக்கு பொருத்தமான புதிய அதிபர் நியமிக்கப்பட வேண்டும் எனக் கோரி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் இணைந்து சுமார் நான்கு மணி நேரம் தொடர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பதவி விலக முடிவு
இந்த போராட்டத்தின்போது, பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன், தற்போது பதவியில் உள்ள அதிபர் நேரடி கலந்துரையாடல் நடத்திய பின் தான் பதவி விலக விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதனைதொடர்ந்து, போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை நிறைவு செய்தனர்.
பின்னர் பதவிய விலகிய அதிபர் கல்வி அமைச்சில் சென்று புதிய பணிநியமனை ஏற்கத் தயாராக இருப்பதாக ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
மதியம் 1.00 மணியளவில், காவல்துறை பாதுகாப்புடன் அவர் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
