Home இலங்கை சமூகம் களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் உயிரிழப்பு

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் உயிரிழப்பு

0

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, வஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த சம்பத் மெண்டிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி, கடந்த
ஜூலை 21 ஆம் திகதி சிறைச்சாலை வளாகத்தில் உள்ள ஒரு மரத்தில் ஏறி, பின்னர்
அதிலிருந்து தரையில் குதித்ததால் பலத்த காயமடைந்தார்.

உயிரிழப்பு

இதனையடுத்து, அவர் சிகிச்சைக்காக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,
குணமடைந்த பிறகு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

எனினும், கைதியின் நிலை மோசமடைந்து, நேற்று முன்தினம் (15) இரவு அவர் மீண்டும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version