Home இலங்கை சமூகம் காலி சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு: வெளியான காரணம்

காலி சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு: வெளியான காரணம்

0

காலி (Galle) சிறைச்சாலையில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க (Hemantha Ranasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த கைதி மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் (Karapitiya Teaching Hospital) சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

மூளைக் காய்ச்சல்

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை (13) அவர்  உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று கைதிகள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version