இயக்குனர் ராஜமௌலி அடுத்து மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா சோப்ரா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்த படத்திற்கு வாரணாசி என பெயர் வைக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வில்லனாக பிரித்விராஜ்
இந்நிலையில் தற்போது நடிகர் பிரித்விராஜ் வில்லனாக நடிப்பதாக ராஜமௌலி அறிவித்து இருக்கிறார்.
வீல் சேரில் இருக்கும் நபராக தான் மிரட்டலான லுக்கில் அவர் இருக்கிறார். Motor neuron disease காரணமாக அவர் படம் முழுங்க வீல் சேரில் வருவது போல தான் கதை இருக்குமாம். இருப்பினும் அவர் சேரில் ரோபோடிக் கைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷூட்டிங்கில் பிரித்விராஜ் நடிப்பை பார்த்துவிட்டு ராஜமௌலி ‘எனக்கு தெரிந்த சிறந்த நடிகர்களில் நீங்களும் ஒருவர்’ என சொன்னாராம்.
