Home முக்கியச் செய்திகள் கொழும்பில் கோர விபத்து: மோதித் தள்ளப்பட்ட வாகனங்கள் – 15 பேர் காயம்

கொழும்பில் கோர விபத்து: மோதித் தள்ளப்பட்ட வாகனங்கள் – 15 பேர் காயம்

0

மொனராகலையில் இருந்து கொழும்பு (Colombo) நோக்கி சென்ற பேருந்து ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் (National Hospital of Sri Lanka) விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து இன்று (11) காலை அவிசாவளை – கொழும்பு, பழைய வீதியில் வெல்லம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வாகனங்களுக்கும் பலத்த சேதம்

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், வெல்லம்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் மீத்தோட்டமுல்ல சந்திக்கும் இடையில் வீதியோரத்தில் மூன்று லொறிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

இன்று அதிகாலையில் அதிவேகமாக வந்த பயணிகள் பேருந்து, நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மற்ற மூன்று வாகனங்களும் மோதியதில் நான்கு வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது.

மேலும், விபத்து சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version