Home இலங்கை குற்றம் ஹட்டனில் மூடப்பட்டிருந்த தொடருந்து பாதையில் அத்துமீறி சென்ற பேருந்து சாரதி கைது

ஹட்டனில் மூடப்பட்டிருந்த தொடருந்து பாதையில் அத்துமீறி சென்ற பேருந்து சாரதி கைது

0

Courtesy: Satheeskumar

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில், நாவலப்பிட்டி வரகாவ தொடருந்து கடவை மூடப்பட்டிருந்த நிலையில், தனியார் பேருந்து ஒன்று ஒரு சிறிய இடத்தின் வழியாக
பொறுப்பற்ற முறையில் செலுத்தப்பட்ட குற்றச்சாட்டில், சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்சபான பகுதியிலிருந்து கினிகத்தேனை வழியாக கடந்த 17ஆம் திகதி கண்டி நோக்கி
பயணித்த தனியார் பேருந்து, வரகாவ தொடருந்து கடவை அருகில் வரும்போது கண்டியில் இருந்து
நாவலப்பிட்டிக்கு வந்த தொடருந்துக்காக பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருந்துள்ளது.

பிணை 

தொடருந்து கடவை திறக்கப்படும் வரை, சில முச்சக்கர வண்டிகள் குறித்த பேருந்தின் முன்
நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தனியார் பேருந்தின் சாரதி, தொடருந்து கடவையில் உள்ள ஒரு
சிறிய இடத்தின் வழியாக பேருந்தினை செலுத்திய சில நிமிடங்களில் தொடருந்தும் குறித்த இடத்தை
கடந்துள்ளது.

இந்த சம்பவம் அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ
டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பாக தொடருந்து பாதுகாப்பு கடவை காவலரால் நாவலப்பிட்டி பொலிஸாருக்கு
செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது
செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

சந்தேக நபருக்கு எதிராக நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்று நாவலப்பிட்டி பொலிஸ் போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version