ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் புதிய காவல்துறை மா அதிபராக, சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக்க சனத் குமாநாயக்க புதிய காவல்துறை மா அதிபருக்கு ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று (13.08.2025) வழங்கி வைத்தார்.
37ஆவது காவல்துறை மா அதிபர்
முன்னதாக இந்த நியமனத்துக்கு இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61E(b) பிரிவின்படி இந்தப் புதிய நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி இலங்கையின் 37ஆவது காவல்துறை மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
