பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின்,
குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் முன், பதில் பொலிஸ் மா
அதிபர் பிரியந்த வீரசூரிய சாட்சியமளித்துள்ளார்.
நேற்று இந்த சாட்சியம் பதிவாகியுள்ளது.
வெலிகம விருந்தக துப்பாக்கிச்சூடு
விசாரணையின் முக்கிய விடயமாக, வெலிகம விருந்தக துப்பாக்கிச்சூடு தொடர்பில்,
தென்னகோனுக்கு எதிரான முக்கிய குற்றச்சாட்டு அமைந்திருந்தது.
இந்த நிலையில், இந்த சம்பவம், பொலிஸ் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கடுமையாக
பாதித்துள்ளதாக, பதில் பொலிஸ் மா அதிபர் தனது சாட்சியத்தில்
குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொலிஸுக்கு தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர் விசாரணைகள்
அதேநேரம், ஆதாரங்கள் சிதைக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன, அங்கீகரிக்கப்படாத
பதவி உயர்வுகள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் பொதுப் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் டிரான்
அலஸ் இந்த நடவடிக்கைகள் பற்றி அறிந்திருந்தார்
என்பதையும், பதில் பொலிஸ் அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
