Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரித்துள்ள தொடர் குற்றச்செயல்கள்

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் அதிகரித்துள்ள தொடர் குற்றச்செயல்கள்

0

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் தற்போது, ​​நிலத்தடி மின்சார வடங்கள் அறுக்கப்பட்டு திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் பிறரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான செயல்களால் சாலையை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் சிரமப்படுவதாக கூறப்படுகிறது.

பல சந்தர்ப்பங்களில் அறுந்து கிடந்த மின் வடங்களின் பாகங்கள் திருத்தப்பட்ட போதும், திருத்தப்பட்ட பாகங்களும் திருடர்களால் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கண்காணிப்பு பணி

இந்நிலையில், தற்போது இரவு பகலில் திருடர்கள் இந்த திருட்டில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்டது என்றும், மின்கம்பிகளை அறுத்துக்கொண்டிருந்தவர்களை அதிகாரிகள் பிடித்து பொலிஸாரிடம் பலமுறை ஒப்படைத்தும் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.

இந்த இடைவிடாத மின் வட திருட்டை நிறுத்தும் வகையில், நெடுஞ்சாலைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் கட்டுநாயக்க – கொழும்பு நெடுஞ்சாலையில் இரவு நேர நடமாடும் கண்காணிப்பு பணிகளையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை வரை இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன், இந்த விஜயங்களின் போது அதிவேக நெடுஞ்சாலையின் நிலத்தடி மின் பாதை அமைப்பில் இடம்பெறும் நாசவேலைகள் அவதானிக்கப்பட்டவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version