தேர்தல் காலங்களில் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்துவதாகவும் 13 வது திருத்த சட்டத்தின் அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் தொடர்பில் பேச வருவதாகவும் ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சிறிதுங்க ஜயசூரிய (Siritunga Jayasuriya) சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியுள்ள 39 வேட்பாளர்களில் ஒருவர் கூட தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் நிலைப்பாட்டை முன்வைக்க தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யுத்தம் நிறைவடைந்து 16 வருடங்கள் கடந்து விட்டுள்ள நிலையில், தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் என யாருக்குமே இன்னும் எந்த வித தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ள பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது கீழுள்ள காணொளியில்…