Home இலங்கை சமூகம் தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

0

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட 15 அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவித்து புதுப்பிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சின் (Ministry of Defense) செயலாளர் சம்பத் துய்யகொந்தாவினால் (Sampath Thuyacontha) இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

15 அமைப்புகள் மற்றும் 217 நபர்களின் பெயர் விபரங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு அமைச்சு 

இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலக தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசு, உலக தமிழர் நிவாரண நிதியம், கனேடிய தமிழர் தேசிய அவை மற்றும் டி.வை.ஓ என அறியப்படும் தமிழ் இளைஞர் அமைப்பு ஆகியன இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் எக்சியூ என்று அறியப்படுகின்ற தலைமையகக் குழு, தேசிய தௌஹித் ஜமாத், ஜமாதே மிலாதே இப்ராஹிம், விலயாத் அஸ் செயிலானி, டருள் ஆதர் அத்துபவியா, இலங்கை இஸ்லாமிய மாணவர் ஒன்றியம் மற்றும் சேவ் த பேர்ளஸ் ஆகியனவும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகள் காரணமாகக் குறித்த அமைப்புகள் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்படுவதாகப் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version