இந்தியா ஸ்ரீலங்கா பவுண்டேசன் என்ற இந்திய – இலங்கை அறக்கட்டளை,
இலங்கையர்களிடம் இருந்து பல்வேறு துறைகள் தொடர்பில் திட்ட முன்மொழிவுகளுக்கு
அழைப்பு விடுத்துள்ளது.
கலை மற்றும் கலாசாரம், கல்வி, விவசாயம், அறிவியல் மற்றும் தொழிநுட்பம்,
சுகாதாரம், சமூக பணிகள், மேம்பாட்டு ஆய்வுகள், சுற்றுலா மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிற கல்வி நடவடிக்கைகள் ஆகிய துறைகளில்
இந்த திட்ட முன்மொழிகள் வரவேற்கப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம்
அறிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பு
அத்துடன், இந்திய மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளை இலங்கை மொழிகளுக்கு
மொழிபெயர்த்து வெளியிடுவதற்கான முன்மொழிவுகள் வரவேற்கப்படுவதாக இந்திய
உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.
இந்த திட்ட முன்மொழிவுகளை, தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள் மற்றும் குழுக்கள்
சமர்ப்பிக்க முடியும்.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பப் படிவத்தை (https://www.hcicolombo.gov.in/) என்ற இந்திய
உயர்ஸ்தானிகரக வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யமுடியும்.
விண்ணப்பப்படிவங்கள்
அத்துடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவங்களை, முன்மொழிவுடன், 2025
ஆகஸ்ட் 12ஆம் அன்று அல்லது அதற்கு முன் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
விண்ணப்பத்தை islfcolombo2@gmail.com வழியாக மின்னஞ்சல் செய்யலாம் அல்லது
அஞ்சல் மூலம் இந்தியா – இலங்கை அறக்கட்டளை, இந்திய உயர்ஸ்தானிகராலயம்,
36 – 38, காலி வீதி, கொழும்பு 3 என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
