சிகிரியா குன்றுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி மின்தூக்கியொன்றை நிறுவுவது குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சிகிரியா மற்றும் அதனை சூழவுள்ள சுற்றுலாப் பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக இந்த செயற்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
முன்மொழிவுகள் குறித்து இறுதி முடிவு
சிகிரியாவிற்கு வருகை தரும் முதியவர்கள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் நோயுற்றவர்களை இலகுவாக அழைத்துச் செல்வதற்கு வசதியாக இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதற்கு முன்னதாக குறித்த செயற்திட்டம் தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்துடன் கலந்துரையாடவும், சூழல் பாதிப்புகள் குறித்த அறிக்கையைப் பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த முன்மொழிவுகள் குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.