Home இலங்கை கல்வி கல்வி அமைச்சு முன்மொழிந்த சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு

கல்வி அமைச்சு முன்மொழிந்த சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு

0

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்த கல்வி சீர்திருத்தங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும் என்று கொழும்பு பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறியுள்ளார்.

வரலாறு போன்ற ஒரு பாடம் இல்லாமல் உலகை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

கல்வியின் கட்டாயப் பகுதி

“உலகைப் புரிந்துகொள்வது இந்தக் காலத்தில் அவசியம். இது நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்கக்கூடிய ஒரு பாடமல்ல. குடிமையியல் போன்ற ஒரு பாடத்தை நீங்கள் விரும்பினால் தேர்ந்தெடுக்க முடியாது.

அது கல்வியின் கட்டாயப் பகுதியாக இருக்க வேண்டும்.

எனவே, இந்த விடயங்களைப் பற்றி சிந்திக்காமல் கல்வி சீர்திருத்தங்களுக்குச் செல்வது கல்விக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இவை இப்படிச் செய்யப்பட்டால், எந்தக் காரணத்திற்காகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெறாது.

மேலும், அவர்களின் அரசியல் பயணத்திற்கு இவ்வாறான செயற்பாடுகள் தீங்கையே விளைவிக்கும். அத்தோடு, அரசாங்கம் சிந்திக்காமல் இவற்றைச் செய்கிறார்கள்” என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version