யாழ் (Jaffna) தையிட்டி பகுதியில் திறக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்பு
தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று (14) காலை தெல்லிப்பளை (Tellippalai) பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
வலி வடக்கு சிவில் சமூக
அமையத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாரிய ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவகெங்கா சுதீஸ்னரிடம் (Sivagenga Sutheesnar) மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் (Ponnambalam),
சட்டத்தரணி நடராஜர் காண்டீபன் (Nataraja Kandipan), சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதின செய்திகளுக்கு பிரதீபன்…!
Source: https://ibctamil.com/article/protest-against-alcohol-liquor-bar-open-in-jaffna-1728884619
