ஹட்டன் (Hatton) குயில்வத்தை பகுதியில் மேலதிக மதுபானசாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் குயில்வத்தை எண்ணை நிரப்பு
நிலையத்திற்கு அருகாமையில் நேற்று (25.08.2024) இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் குயில்வத்தை பகுதியில் சுமார் 1480 குடும்பங்கள் இருப்பதோடு இந்த
பகுதிக்கு இப்போது மூன்று மதுபானசாலைகள் காணப்படுகின்றன.
சுலோக அட்டைகள்
இந்த மதுபானசாலைகள்
காரணமாக உள்ள பிரச்சினைகளையே தீர்த்து கொள்ள முடியாதுள்ள நிலையில் மேலும் ஒரு
மதுபானசாலை அவசியமில்லை என குயில்வத்தை பிரதேச மக்கள் எதிர்ப்பு
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆர்ப்பாட்டகாரர்கள் மலையக வளர்ச்சியை மண்ணில் புதைக்காதே, இலாபம் தேடும்
அமைச்சர்கள் முதலாளிகள், மதுவால் பாடசாலை சமூகத்தை அழிக்காதே போன்ற வாசகங்கள்
எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த பிரதேசத்தில் குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயம்
மற்றும் மிகவும் பிரசித்த பெற்ற சிவன் ஆலயம் ஒன்றும் இருப்பதாகவும்
இந்நிலையில் இந்த மதுபானசாலை அமையப்பட்டால் பாடசாலை மாணவர்களின் கல்வி
நடவடிக்கை பாதிப்பதாகவும் அத்தோடு கலாசார சீரழிவும் ஏற்பட
வாய்ப்பிருப்பதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.