Home இலங்கை சமூகம் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறையில் மாபெரும் போராட்டம்

இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக பருத்தித்துறையில் மாபெரும் போராட்டம்

0

இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழ்ப்பாணம் (Jaffna) – பருத்தித்துறையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் “பருத்தித்துறை நகரை
மீட்போம்“ எனும் தொனிப்பொருளில் இன்று (25) குறித்த போராட்டம் இடம்பெற்றது.

பருத்தித்துறை துறைமுகத்தடியில் இருந்து காலை 8:30 மணியளவில் ஆரம்பமான இந்த
போராட்டம், வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் வரை  முன்னெடுக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பு

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, நீண்ட காலமாக இராணுவ ஆக்கிரமிப்பில் காணப்படும்
பருத்தித்துறை தபால் அலுவலகம் முழுமையாக இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து
விடுவிக்க வேண்டும்.

பருத்தித்துறை நகரின் வரலாற்று சிறப்புமிக்க வெளிச்ச
வீட்டில் பல காலமாக இருக்கும் இராணுவத்தினை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

நூற்றாண்டு காலமாக இருக்கும் பருத்தித்துறை நீதிமன்றத்தை இடப்பற்றாக்குறை
காரணமாக இடமாற்றம் செய்யும் நோக்கம் காணப்படுவதால் இராணுவத்தினரை உடனடியாக
வெளியேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகள் உள்ளடக்கிய மகஜர் பருத்தித்துறை பிரதேச
செயலகத்தில் கையளிக்கப்பட்டது.

அத்துடன் இதற்கான தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் ஆர்ப்பாட்டம் தொடரும் எனவும்
ஆர்ப்பாட்டக்காரர்களால் கூறப்பட்டது.

இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல கட்சிகள் தமது முழுமையான ஆதரவை வழங்கியபோதும் தேசிய மக்கள் சக்தியினர் மட்டும் பங்களிப்பு செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/1AkKN4tZxYE

NO COMMENTS

Exit mobile version