திருக்கோணேஸ்வர (Thirukoneshwaram) ஆலயத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் திருட்டு
சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் (Trincomalee) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்திற்கு
முன்பாக இன்று (11.08.2024) நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, திருகோணமலை இந்துக்கள் சார்பில் பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை
வெளிப்படுத்தி இருந்தனர்.
சட்ட நடவடிக்கை
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘எங்கே எங்கே தாலிக்கொடி எங்கே’, ‘ஆளுநர்
அவர்களே ஆலயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும்’,’மத்திய அதிகார மாகாண அதிகாரம்
என்று அரசியல் கூறி பிழையை மறைக்க துணை போகாதே’ மற்றும் ‘கோணேஸ்வரர் ஆலயம் ஒன்றும்
வங்கி அல்ல’ என்ற பதாதைகளை
ஏந்தியிருந்தனர்.
கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் திருக்கோணேஸ்வர ஆலயத்தில் ஆண்டாண்டு
காலம் பழமை வாய்ந்த பல நகைகள் திருட்டுப் போய் உள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இது தொடர்பில் ஆலய
பரிபாலன சபையினர் அலட்சியமாக இருப்பதாகவும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய
கயவர்களை இனம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண ஆளுநரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.