Home இலங்கை சமூகம் புத்தளத்தில் கல்விசாரா ஊழியர்களினால் போராட்டம் முன்னெடுப்பு

புத்தளத்தில் கல்விசாரா ஊழியர்களினால் போராட்டம் முன்னெடுப்பு

0

புத்தளம் (Puttalam) கல்வி வலயத்திற்குற்பட்ட கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு
கோரிக்கைகளை முன்வைது புத்தளம் வலயக் கல்வி பணிமனைக்கு முன்பாக பேராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது, இன்று (24.06.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சம்பளத்தை அதிகரிக்குமாறும் இடம் மாற்றத்திற்கான தீர்வைப்
பெற்றுத் தருமாறும் கோரப்பட்டுள்ளது. 

முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

மேலும், சட்ட ஒழுங்ககள் மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை கல்விசாரா ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.

அதேவேளை, பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் ஊழியர்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/protest-by-non-academic-employees-in-puttalam-1719227152

NO COMMENTS

Exit mobile version