Home இலங்கை சமூகம் மன்னாரில் 14 வது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னாரில் 14 வது நாளாக தொடரும் போராட்டம்!

0

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு
ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய
தினம் சனிக்கிழமை (16) 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற
போராட்டத்திற்கு இன்றைய தினம் சனிக்கிழமை(16) ஆதரவு வழங்கும் வகையில் வங்காலை
மற்றும் தலைமன்னார் கிராமம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள்
குறித்த போராட்டத்தில் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

சுழற்சி முறையில் போராட்டம்

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தலையில் கருப்பு பட்டி அணிந்து
போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த
போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை
ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல்
மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம்
தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்

NO COMMENTS

Exit mobile version