Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

0

மட்டக்களப்பு சித்தாண்டியில் யானைகளின்
தாக்குதல்களை கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மக்கள் குடியிருப்பு பகுதியில் யானை
புகுந்து தாக்கியதால் சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில், நேற்று(01.01.2025) மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

யானைத் தாக்குதலுக்கு இலக்கான சிறுவர்கள் இருவரும் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உரிய நடவடிக்கைகள்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இதேநேரம், யானைத் தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு சென்ற தேசிய மக்கள்
சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு குறித்த பகுதியிலிருந்து
யானைகளை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார். 

அத்துடன், ஒரு வாரத்திற்கு சித்தாண்டி பகுதியில் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளை
தங்கியிருந்து யானைகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்தவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version