Home இலங்கை சமூகம் வித்தியா படுகொலைக்கு நீதிகோரி ஆர்பாட்டம்! பொலிஸாருடன் கடும் வாக்குவாதம்

வித்தியா படுகொலைக்கு நீதிகோரி ஆர்பாட்டம்! பொலிஸாருடன் கடும் வாக்குவாதம்

0

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில் இந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பொதுவாக பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்றைய தினம் (13) வேலணை சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தினை சமூக மட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்தன.

பதற்றமான சூழ்நிலை

இதில் சமூக மட்ட அமைப்பினர், கல்விமான்கள், கட்சி சார்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஜனநாயக ரீதியாக இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பொலிஸார் உட்புகுந்து குழப்பம் விளைவித்ததால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக ஆர்பாட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை கேட்டு பதிவுசெய்வதற்கு பொலிஸார் முனைந்ததாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது படங்களை வேண்டுமானால் எடுக்குமாறும், பெயர்களை கூற முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version