Home இலங்கை சமூகம் புதிய அரசாவது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்!

புதிய அரசாவது அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்!

0

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில்
கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று (08.01.2025) காலை 11 மணியளவில் இது இடம்பெற்றது.

கையெழுத்து போராட்டம்

பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர்
பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு தரப்பினரதும் பேராதரவுடன் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து
வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு
சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும்
மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய
அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version