Home இலங்கை சமூகம் யாழில் சட்டவிரோத தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

யாழில் சட்டவிரோத தையிட்டி விகாரையை அகற்ற கோரி போராட்டம்

0

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை
அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம்
மீள வழங்குமாறு வலியுறுத்தியும் இன்று(09.06.2025) போராட்டம் நடைபெற்றுள்ளது.

குறித்த
போராட்டம் நாளைய தினமும் இடம்பெறவுள்ளது.

திஸ்ஸ விகாரையில் நாளை நடைபெறவுள்ள பொசன் பௌர்ணமி வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக
ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் கொண்டுவரப்படவுள்ளனர்.

நீதிமன்ற கட்டளை

இந்நிலையில், பலாலி பொலிஸாரினால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்
கட்டளையொன்றும் பெறப்பட்டு போராட்ட பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், காணி உரிமையாளர்கள்
உள்ளிட்ட 27 நபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கு எதிராகவே குறித்த கட்டளை
பெறப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version