Home இலங்கை சமூகம் புத்த சாசன அமைச்சில் கைவைக்காதே! கொழும்பில் மாபெரும் போராட்டம்

புத்த சாசன அமைச்சில் கைவைக்காதே! கொழும்பில் மாபெரும் போராட்டம்

0

புத்த சாசன அமைச்சில கை வைக்காதே எனும் தொனிப்பொருளில் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க பௌத்த அமைப்புக்கள் தீர்மானித்துள்ளன.

கொழும்பு விகாரமகா தேவி பூங்கா அருகில் அமைந்துள்ள பௌத்த சாசன திணைக்களத்திற்கு அருகில் குறித்த போராட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி மாலை இரண்டு மணியளவில் நடைபெறவுள்ளது.

முக்கிய நோக்கம்.. 

பௌத்த சாசன அமைச்சு காலாவதியாகி விட்டதாக பௌத்த சாசன மற்றும் கலாசார அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

அது பௌத்த மக்கள் மற்றும் மகாசங்கத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியிருந்தது.

அவ்வாறான நிலையில் புத்த சாசன அமைச்சை பாதுகாக்கும் நோக்கில் மேற்குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version