ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகள் இணைந்து இன்று (21.11.2025) நுகேகொடையில் ஏற்பாடு செய்திருந்த “மாபெரும் மக்கள் குரல்” பொதுப் பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவாக சிதம்பரம் கருணாநிதி தலைமையிலான எமது தலைமுறைக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
கொழும்பு கோட்டை பிரதான தொடருந்து நிலையத்தின் முன்னால் தற்போது குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகிறது.
ராஜபக்சர்களுக்கு எதிர்ப்பு
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்துக்கொண்டிருந்த நிலையில், “இனவாத அரசியல் எங்களுக்கு வேண்டாம், தமிழ் தேசிய கீதத்தை தடை செய்த துரோகியே , இனவாதிகளே ஒழிக, ஒழிக” போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமல் ராஜபக்ச தலைமையில் நுகேகொடையில் ஆரம்பித்துள்ள பொதுப்பேரணிக்கும், ராஜபக்ச தரப்புக்கும் எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
🔴YOU MAY LIKE THIS
https://www.youtube.com/embed/iMsdajXGtC8
