Home முக்கியச் செய்திகள் Anura Go Home என்று எதிர்ப்பு – திண்டாடும் காவல்துறை

Anura Go Home என்று எதிர்ப்பு – திண்டாடும் காவல்துறை

0

வெளிநாட்டு பயணத்தின் போது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த 22 ஆம் திகதி பிற்பகல் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதையடுத்து, உடல் நல குறைவால் நள்ளிரவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பின்பு கொழும்பு (Colombo) தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் அவர் சிகிச்சை பெற்றுவருகின்ற நிலையில் அவருக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (26) விசாரணைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு (Anura Kumara Dissanayake) எதிராக கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தை ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் “Anura go home” கோஷங்களை எழுப்பி பாரிய போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் அங்கு பற்றமான சூழல் உருவாகியுள்ளதுடன் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.   

மேலும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், கொழும்பு தேசிய வைத்தியசாலை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பெலவத்த ஜேவிபியின் தலைமைக் காரியாலயம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/8bsLdwf34nU

NO COMMENTS

Exit mobile version