Home இலங்கை சமூகம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பால் பாரிய ஆர்ப்பாட்டம்! குவிக்கப்பட்ட கலகத்தடுப்பு பிரிவினர்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பால் பாரிய ஆர்ப்பாட்டம்! குவிக்கப்பட்ட கலகத்தடுப்பு பிரிவினர்

0

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை இன்று (14) முத்துநகர் விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

திருகோணமலை (Trincomalee) பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்துநகர் பிரதேசத்திலுள்ள 800 ஏக்கர் விவசாயநிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்பட்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் 

இது தொடர்பில் போராட்டக்காரர்கள் மேலும் தெரிவிக்கையில், “முத்துநகரில் 1972 ஆம் ஆண்டு முதல் நாம் விவசாயம் செய்து வருகிறோம்.

352 குடும்பங்கள் 5000 பேரின் வாழ்வாதாரம் இந்த நிலங்களிலேயே தங்கியுள்ளன, நாங்கள் இது தொடர்பில் திருகோணமலையிலுள்ள அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து பிரச்சினை தொடர்பில் தெரிவித்தும் எவ்வித தீர்வும் கிட்டவில்லை” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/embed/LqamvWkjqEc

NO COMMENTS

Exit mobile version