எல்லை தாண்டும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கைதுசெய்யக்கோரி யாழ். மாவட்ட கடற்றொழில்
அமைப்புகளால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (01.07.2024) முற்பகல் 11.30 மணியளவில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம்
முன்றலில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) மருதடிச் சந்தியில் ஆரம்பித்த இந்தப் போராட்டமானது இந்திய துணைத்
தூதரகம் முன்றலில் நிறைவுற்றது.
கையளிக்கப்பட்ட மனு
இதன்போது, கடற்றொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மனு ஒன்றும்
கையளிக்கப்பட்டுள்ளது.