Home இலங்கை சமூகம் செம்மணிக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்

செம்மணிக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்

0

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்று (01.11.2025) யாழ்ப்பாண நகர்ப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை தடை செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இப்போதாவது நீதி வழங்கு போன்ற வாசகங்களை மும்மொழியிலும் கொண்ட பதாதைகளை மக்கள் ஏந்தியிருந்தனர்.

பௌத்த பிக்குகள்

குறித்த போராட்டத்தில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version