Home இலங்கை சமூகம் செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்

செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்

0

செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் உண்மை கண்டறியபடவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது

இதன்போது குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கோஷங்களை எழுப்பிய வண்ணம் 

குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் “இலங்கை அரசே எம்மிடம் இருந்த வலிந்து அபகரிக்கபட்டு படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோருக்கு நீதி கோருகின்றோம்“ எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

நீதி வேண்டும் நீதி வேண்டும் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும், ஐ.நா செவி கொடு ஜனாதிபதி கண்விழி, புதைகுழிகள் அடைக்கலம் அல்ல உண்மை பேசும் தளங்கள் ,விசாரணையை துரிதபடுத்து ,செம்மணிக்கா ஒரு நீதி பட்டலந்தவுக்கு ஒரு நீதியா ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் பொழுது பாதிக்கப்பட்ட தரப்பினர், பொதுமக்கள் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர், மதத்தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழியை பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு பொலிஸார் போராட்டகளத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version