செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டமும், கருத்தரங்கும்
யாழ்ப்பாணத்தில் இன்று(01.10.2025) முன்னெடுக்கப்படவுள்ளது.
சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், ‘செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி
மறைப்பதை நிறுத்து: உண்மையை வெளிப்படுத்து’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம்
நகர்ப் பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி, இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆர்ப்பாட்டமும், அதைத் தொடர்ந்து
பிற்பகல் 3 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கத்தில் கருத்தரங்கும்
இடம்பெறவுள்ளன.
