சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கின் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள்
குறித்த போராட்டமானது இன்று (30) காலை பத்து மணிக்கு யாழ் கிட்டு பூங்கா முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“சர்வதேச நீதி கோரிய பேரணிக்கு வலுச்சேர்ப்போம் வாரீர் ” என்ற தொனியில் குறித்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் பதாகைகளை ஏந்தி, ஊர்திப் பவனியுடன் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/-GIqyo7g7sw
